/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலத்தில் திருக்குறள் எழுதி அசத்திய பி.புதுப்பட்டி ஊராட்சி
/
பாலத்தில் திருக்குறள் எழுதி அசத்திய பி.புதுப்பட்டி ஊராட்சி
பாலத்தில் திருக்குறள் எழுதி அசத்திய பி.புதுப்பட்டி ஊராட்சி
பாலத்தில் திருக்குறள் எழுதி அசத்திய பி.புதுப்பட்டி ஊராட்சி
ADDED : மார் 11, 2025 04:34 AM

காரியாபட்டி: வட நதியில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் பி.புதுப்பட்டி ஊராட்சி நிர்வாகம் திருக்குறளை எழுதி அசத்தியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காரியாபட்டி பி.புதுப்பட்டியில் வட நதி, குடநதி (குண்டாறு) என இரு நதிகள் இணையும் இடம் பெருங்காசி என அழைக்கப்பட்டு வருகிறது. வட நதிக்கரையில் குருநாதன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல ஆற்றில் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும். அப்போது மக்கள் சென்று வர சிரமப்பட்டனர். இதையடுத்து வட நதியின் குறுக்கே மக்களின் வசதிக்காக ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களில் முதல் திருக்குறளை பாலத்தின் சுவற்றில் எழுதி அசத்தியுள்ளனர். பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. வித்தியாசமான முயற்சியாக இருந்து வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணத்தில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று அனைத்து இடங்களிலும் எழுதும் போக்கை கடைப்பிடித்தால் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

