/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு மழை பெய்தால் அனுமதி கிடையாது

ADDED : மே 18, 2024 04:19 AM
வத்திராயிருப்பு, : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி பிரதோஷம், பவுர்ணமிவழிபாடுகளுக்கு மழையை பொருத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி முதல் 4 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து சதுரகிரி மலைப்பகுதி வறண்டு இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்யும் மழையினால் மலையில் பசுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
இக்கோயிலில் மே 20ல் பிரதோஷம், 23ல் பவுர்ணமி வழிபாடு நடக்க உள்ளது. இதற்காக மே 20 முதல் 24 முடிய 5 நாட்கள்பக்தர்கள் மலையேற அனுமதிக்க வனத்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. அரசு தரப்பில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மே 20 முதல் 24 வரை மழையை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.