/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; இன்று முதல் பக்தர்கள் அனுமதி
/
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; இன்று முதல் பக்தர்கள் அனுமதி
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; இன்று முதல் பக்தர்கள் அனுமதி
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; இன்று முதல் பக்தர்கள் அனுமதி
ADDED : மார் 10, 2025 11:47 PM

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று (மார்ச் 11) முதல் மார்ச் 14 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் இன்று (மார்ச் 11) பிரதோஷம், மார்ச் 13ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத விதமாக கனமழை பெய்தால் அப்போது பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.