/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு
/
சதுரகிரியில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு
ADDED : மே 21, 2024 07:16 AM
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு, பக்தர்கள் இன்றி நடந்தது. கனமழை காரணமாக சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டதன் காரணமாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்து இருந்தது. இதனையடுத்து தாணிப்பாறை வனத்துறை கேட் மூடப்பட்டது.
இந்நிலையில் பிரதோஷ நாளான நேற்று காலை குறைந்த அளவு வெளியூர் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால், மலையேற அனுமதி இல்லாததால் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் இன்றி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.ஓடைகளில் நீர் வரத்து உள்ளதால் வனத்துறை மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

