ADDED : மார் 28, 2024 05:33 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மாவட்டத்தில் விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளுக்கான சட்டசபை தொகுதிகள் உள்ளது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆர்.ஆர்.நகரில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் சாத்துார் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ராஜா, அசோகன், தென்காசி லோக்சபா வேட்பாளர் ராணி, விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தொழலதிபர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
