sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்


ADDED : ஆக 24, 2024 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 03:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டேஷனில் இருந்து நகருக்குள் வருவதற்கு போதிய பஸ்கள் இல்லாததால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை- செங்கோட்டை, மயிலாடுதுறை- செங்கோட்டை, மதுரை,- குருவாயூர் பயணிகள் ரயில்களும், சென்னை செங்கோட்டை வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களும், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி, திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் ரயில்களும் இயங்கி வருகிறது.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தினசரி ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு வரும் பயணிகளின் வசதிக்காக அமரித் பாரத் திட்டத்தின் கீழ் நடை மேம்பாலம், லிப்ட் வசதி, வாகன காப்பகம், நவீன சுகாதார வளாகம், டிஜிட்டல் டிஸ்ப்ளே கோச் பொசிஷன் போர்டுகள் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய ஜங்ஷன் ரயில் நிலையங்களில் உள்ளதைப் போல் பயணிகளுக்கான வெயிட்டிங் ஹால் மற்றும் தங்கும் அறை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஆண்டாள் கோயில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் மதுரை, விருதுநகர், தென்காசி போன்ற நகரங்களில் இருந்து ரூ.30 ரயில் கட்டணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் மக்கள், போதிய பஸ் வசதி இல்லாமல் நகருக்குள் வருவதற்கு ஆட்டோ கட்டணம் ரூ.100 கொடுத்து வர வேண்டி உள்ளது.

ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க முடியாத இவர்கள், சிவகாசி ரோட்டில் உள்ள நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கும், ஆண்டாள் கீழ ரத வீதிக்கும் நடந்தே செல்கின்றனர்.

தற்போது ரயில்வே துறை கணக்கின்படி தினமும் 1500க்கு மேற்பட்ட மக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். புதிய ரயில்கள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் கூடுதல் பயணிகள் வர வாய்ப்புள்ளது.

எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நகருக்குள் மக்கள் வருவதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நகரின் வளர்ச்சிக்கு உதவும்


-சந்தானம், ஓய்வு வங்கி அலுவலர்: தற்போது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அதிகளவில் வெளியூர் மக்கள் வந்து செல்லும் நிலையில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே சிவகாசியில் இருந்து வரும் டவுன் பஸ்களை ரயில்வே ஸ்டேஷன் வழியாக பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து நகரில் பல்வேறு தொழில்கள், வியாபாரங்கள் அதிகரித்து நகரின் வளர்ச்சிக்கு உதவும்.

உடனடி அவசியம்


முனியப்பன், அச்சக உரிமையாளர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டாள், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்களுக்கு ஏராளமான வெளி மாவட்ட பக்தர்கள் ரயில் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகின்றனர்.

மேலும் உள்ளூர் மக்களும் ரயில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதி செய்வது உடனடியாக அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us