sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்


ADDED : ஜூலை 27, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 05:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாத்துார் படந்தால் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் அவதி

சாத்துார், ஜூலை 27-

சாத்துார் நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு சந்திப்பில் போக்கு வரத்து நெரிசலால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது .

மதுரை -கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை சாத்துாருக்கு நடுவில் அமைந்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் மேலக்காந்தி நகர், பெரியார் நகர் , அண்ணாநகர், குரு லிங்காபுரம் , படந்தால் ஊராட்சி மக்கள் நான்கு வழிச்சாலையை கடந்து நகருக்குள் வந்து விட்டு செல்லுகின்றனர்.

தாலுகா அலுவலகம் , நகராட்சி அலுவலகம், அரசு தனியார் வங்கிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தனியார் மருத்துவமனை போன்றவையும்மெயின் ரோட்டில் அமைந்துள்ளன.

இதனால் படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பில் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

வெம்பக்கோட்டை ஆலங்குளம் , ராஜபாளையம் செல்லும் பஸ்களும் நான்கு வழிச் சாலையை கடந்து செல்கின்றன.

ஆட்டோக்கள் வேன்கள் லாரிகள் கனரக வாகனங்கள் வெம்பக்கோட்டை ஆலங்குளம் செல்ல இந்த சந்திப்பு வழியாக நான்கு வழிச்சாலையில் திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .

நெரிசலில் சிக்கி பள்ளி மாணவர்கள் சைக்கிளில் இருந்து தவறிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் எதிரும் புதிருமாக வாகனங்கள் ஒழுங்கின்றி வருவதால் சாலையை நடந்து கடப்பவர் களும் விபத்திற்குள்ளாகின்றனர்.

விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக இப்பகுதியில் டிராபிக் போலீசார் அடிக்கடி நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் நான்கு வழிச்சாலையில் அவசர வேலையாக காரில் செல்பவர்களும் கனரக வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும் இரவு நேரத்தில் போலீசார் இல்லாத சமயத்தில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரிக் கார்டுகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சாத்துார் படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பு தீராத போக்குவரத்து நெரிசலை அதிகரித்து வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் விபத்து பகுதியாக மாறி வருகிறது.

ஆபத்தானநிலையில் பயணிகள்

பைபாஸ் ரைடர் பஸ்சில் பயணம் செய்வதற்காக நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் ரோட்டில் நின்று பயணிகள் பஸ் ஏறிச் செல்கின்றனர். தனியார் டிராவல்ஸ் பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் இறக்கி செல்கின்றனர். டிராபிக் போலீசார் பயணிகள் நிழற்குடையில் காத்திருக்க கூறினாலும் பயணிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் வாகனங்கள் மோதி பயணிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.

கார்த்திக் குமார், குடும்பத் தலைவர்

அடிக்கடி விபத்து ஏற்படும் அவலம்

நான்கு வழிச் சாலையின் இருபுறமும் வேகத்தை குறைத்து வர எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி இறங்கி 200 மீட்டருக்குள் சாத்துார் படந்தால் நான்குவழிச் சாலை சந்திப்பு வந்துவிடுகிறது. இந்த இடத்தில் போலீசார் வாகனத்தை நிறுத்தும் போது பாலத்திலிருந்து வேகமாக இறங்கும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் நிற்கும் வாகனத்தின் பின்னால் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் வேகமாக வரும் கார்கள் பேரிக்காட்டில் மோதி விபத்தில் சிக்குகின்றன.

சந்தானம், டிரைவர்.

தீர்வு

சாத்துார் நான்கு வழிச்சாலை படந்தால் ஜங்ஷன் ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கும் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கவும் இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதே இங்கு ஏற்படும் டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us