sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

* பிரச்சனையும் தீர்வும்

/

* பிரச்சனையும் தீர்வும்

* பிரச்சனையும் தீர்வும்

* பிரச்சனையும் தீர்வும்


ADDED : ஏப் 05, 2025 06:10 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: கிராமப் பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசு நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டியதால் திட்டம் முடங்கி போனது.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், திடக்கழிவு திட்ட மையம், குப்பைகளை தரம் பிரிக்க தொட்டிகள், மண்புழு உரக்கூடம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடமைக்கு அரசு ஒதுக்கிய நிதியை செலவு செய்து வீணடித்துள்ளனர். குப்பைகள் பிரிக்கும் மையம், மண்புழு தயாரிக்கும் குடில் ஆகியவை பல ஊராட்சிகளில் காணாமல் போய்விட்டது. இன்னும் சில சேதம் அடைந்து கிடக்கிறது. ஒரு சில ஊராட்சிகளில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக உள்ளது.

மாவட்ட நிர்வாகமும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சிகளில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லை.

குப்பைகளை சேகரிப்பதற்குரிய வாகனங்களும் தரப்படவில்லை. அதிகாரிகளும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்துவது இல்லை. மேலும் குப்பையைப் பிரிக்கும் மையம் ஊராட்சியின் எல்லை பகுதியில் வெகு தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் அங்கு சென்று குப்பைகளை கொட்டாமல் அருகில் உள்ள ஓடைகள், கண்மாய்களில் குப்பைகளை கொட்டுகின்றனர்.

பாலையம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ரோடு ஓரங்களிலேயே குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். எரிந்த பின் எஞ்சிய கழிவுகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் கொட்டுகின்றனர். குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையில் சுவாசக் கோளாறு ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

தீர்வு: கிராமங்களில் முழு சுகாதாரத்தை உறுதிப்படுத்த செயல் இழந்து போன திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

ஊராட்சிகளில் தேவையாக உள்ள தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க தள்ளு வண்டிகள், பேட்டரி வாகனங்கள், குப்பைகளை எடுத்து செல்ல மினி லாரிகள் ஆகியவற்றை ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

குப்பைகளை கண்ட இடங்களில் கொட்ட கூடாது என பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும். ரோடு ஓரங்கள், நீர்நிலைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டியும் எரிக்கவும் கூடாது என எச்சரிக்க வேண்டும்.

ஊராட்சிகளில் கட்டப்பட்டு சேதம் அடைந்த புகைகளை கொட்டும் மையம், மண்புழு உரக்குடில் ஆகியவற்றை மராமத்து பணிகள் செய்து பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குப்பைகள் எரிப்பதால் சுவாச கோளாறு


அழகர்சாமி, சமூக ஆர்வலர்: நல்ல திட்டமான திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கி போனதற்கு காரணம் அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் தான். கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் தினமும் குப்பைகளை ரோடு ஓரங்களில் தான் எரிக்கின்றனர்.

இந்த நாள் கிராமங்களில் பலருக்கு சுவாச கோளாறு மூச்சு திணறல் ஏற்படுகிறது. தூய்மை பணியாளர்களிடம் அதிகாரிகள் குப்பைகளை எரிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். ஊராட்சியில் உள்ள குப்பை கொட்டும் மையம், உர குடில், குப்பைகளை தரம் பிரிக்கும் தொட்டி ஆகியவற்றை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பற்றாக்குறையில் துாய்மை பணியாளர்கள்


உமாசங்கர், தனியார் ஊழியர் : ஊராட்சிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப தூய்மை பணியாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இவர்களில் பலர் ஓய்வு பெற்று விட்டதால், பல ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் பணியிடம் காலியாகவே இருக்கிறது. ஊராட்சிகளில் ஒரு சில ஒப்பந்த பணியாளர்களை வைத்து பணிகளை செய்கின்றனர்.

மேலும் குப்பைகளை கொண்டு செல்ல உரிய வாகன வசதிகளும் இல்லை. இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த வசதியாக இருக்கும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us