ADDED : ஜன 10, 2026 06:07 AM
திருச்சுழி: திருச்சுழியில் முக்கியமான ரோடுகளில் நடைபாதைகள், ரோடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் ரோட்டில் நடப்பதால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் திணறி செல்கின்றன.
திருச்சுழி ரமணா மகரிஷி பிறந்த இடம், நூற்றாண்டு புகழ்வாய்ந்த திருமேனி நாதர் கோயில், காசி, ராமேஸ்வரத்துக்கு ஈடான குண்டாறு உள் ளிட்டவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சுழி சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டது.
பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து செல்வர். ஆனால், திருச்சுழியில் உள்ள முக்கிய மான ரோடுகள் ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. காரியாபட்டி ரோடு, நரிக்குடி ரோடு, அருப்புக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
பிரச்னை திருச்சியில் உள்ள ரோடுகள் குறுகலாக உள்ளன. ரோட்டின் இருபுறமும் உள்ள வாறுகால்கள் சீரமைக்கப்பட்டு நடை பாதை அமைக்கப்பட்டது. நடைபாதை முழுவதையும் அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்ட தால் மக்கள் நடந்து செல்ல வழி இல்லை. ஆக்கிர மிப்புகள் அகற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
பஜார் பகுதிகளுக்கு சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்வர். ரோட்டில் நடந்து செல்வதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோடுகளில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் தினமும் வாக னங்கள் சிரமப்பட்டு செல்கிறது.
கடைகளுக்கு முன்பு சன் ஷேடுகள், பந்தல்கள் போட்டுள்ளதால் நடைபாதைகளை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. திருமேனிநாதர் கோயில் பகுதிகள், மக்கள் தர்ப் பணம் செய்யும் குண்டாறு ஆகியவற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
நடைபாதை ஆக்கிரமிப்புகள் பூமிநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்: திருச்சுழியில் பல ஆண்டுகளாக ரோடு மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இதுபோன்ற ஆக்கிரமிப்பு களை அகற்றி மக்கள் நடந்து செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நிரந்தர ஆக்கிரமிப்புகள் உள்ள தால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் மெத்தனம் கருப்பசாமி, சமூக ஆர் வலர்: திருச்சுழியில் ரோடுகள் குறுகலான அமைப்பில் உள்ளது. மக்கள் ரோட்டில் நடந்து செல்வதாலும், கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் கூடும் இடங்களில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
திருச்சுழியில் பார பட்சம் இன்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் நெடுஞ்சாலை, வருவாய் துறை, போலீசார் உள்ளிட்டோர் இணைந்து அகற்ற வேண்டும்.

