நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : தாயில்பட்டியில் பள்ளி மாணவர்கள் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
ஆசிரியர் ஜெயமேரி தலைமை வகித்தார். தள்ளு வண்டியில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் சிறுவர் கதைகளை எடுத்துக் கொண்டு புத்தக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட அட்டைகளை கைகளில் ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

