/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதிமுறையை பின்பற்றாமல் பதவி உயர்வு: ரத்து செய்ய வலியுறுத்தல்
/
விதிமுறையை பின்பற்றாமல் பதவி உயர்வு: ரத்து செய்ய வலியுறுத்தல்
விதிமுறையை பின்பற்றாமல் பதவி உயர்வு: ரத்து செய்ய வலியுறுத்தல்
விதிமுறையை பின்பற்றாமல் பதவி உயர்வு: ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 26, 2024 03:43 AM
விருதுநகர்: விதிமுறையை பின்பற்றாமல் முதுநிலை பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்ய வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வெங்கிடு தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் வைரவன், பொருளாளர் பரமேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன், முன்னாள் தலைவர் கண்ணன், துணைத் தலைவர் ஹபிபத்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி விருதுநகரில் ஜூன் 6 ல் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி, தாராபுரம் ஆகிய கோட்டங்களில் விதிமுறையை பின்பற்றாமல் முதுநிலை பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்து முதன்மை இயக்குநர் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
இதை நிறைவேற்றாத கோட்டப்பொறியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன் 11 ல் தாராபுரம், ஜூன் 14 ல் பொள்ளாச்சி கோட்டங்களில் வட்ட, மாவட்ட நிர்வாகிகள் முறையீடு, ஜூலையில் மாநில பேரவையை விருதுநகரில் நடத்துதல் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.