/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு

ADDED : ஏப் 19, 2024 04:52 AM

நரிக்குடி: கோயில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றாததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தலை புறக்கணிக்க போவதாக மேலப்பருத்தியூர் அருந்ததியினர் காலனி மக்கள் தெரிவித்தனர்.
நரிக்குடி மேலப்பருத்தியூரில் அருந்ததியினர் காலனியில் 65க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். காலனிக்கு பாத்தியப்பட்ட சோணையா கோயிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, அலட்சிய போக்குடன் செயல்படும் அதிகாரிகளை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து, சுவரொட்டிகள் ஒட்டினர். திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் எடுக்கவில்லை.