ADDED : ஆக 18, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, காரியாபட்டி அழகியநல்லுார் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
பேரிடர் மேலாண்மை துறை மூலம் வெடி விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. 55 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை, மீன்வளத் துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகள் என 106 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சத்து 73 ஆயிரத்து 765 மதிப்புள்ளான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

