/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எவ்வித சமரசமும் இன்றி எதிர்க்கட்சி தலைவராக ராகுல் செயல்படுகிறார்: செல்வபெருந்தகை பேச்சு
/
எவ்வித சமரசமும் இன்றி எதிர்க்கட்சி தலைவராக ராகுல் செயல்படுகிறார்: செல்வபெருந்தகை பேச்சு
எவ்வித சமரசமும் இன்றி எதிர்க்கட்சி தலைவராக ராகுல் செயல்படுகிறார்: செல்வபெருந்தகை பேச்சு
எவ்வித சமரசமும் இன்றி எதிர்க்கட்சி தலைவராக ராகுல் செயல்படுகிறார்: செல்வபெருந்தகை பேச்சு
ADDED : ஆக 17, 2024 12:54 AM

விருதுநகர்: லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எவ்வித சமரசமும் இன்றி செயல்படுகிறார், என விருதுநகரில் நடந்த காங். செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசினார்.
விருதுநகரில் நடந்த கூட்டத்தில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார்.
கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன், காங். கமிட்டி எதிர்க்கட்சி தலைவர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார், மாநில துணை தலைவர் திருச்சி வேலுச்சாமி, இளைஞர் மாநில தலைவர் லெனின் பிரசாத் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் பேசியதாவது:
இந்திய மக்கள் மத்தியில் காங்., பற்றி பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் அந்த தாக்கம் படர்கிறது. 1967க்கு முன்பு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், எப்படி காங்., வழிகாட்டியதோ அதே போல் இனி வரும் காலங்களிலும் வழிகாட்ட வேண்டும்.
தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படுத்த வேண்டும். காங். மக்கள்இயக்கமாக மாற விருதுநகரில் காமராஜர் செய்த பணி அளப்பரியது. இந்த நுாற்றாண்டில் மிகச்சிறந்த அரசியல் தலைவர். வரும் காலத்தில் தமிழகத்தில் காங். கட்சிக்கு நல்ல வளர்ச்சி உள்ளது. மக்கள் இக்கட்சியை நம்புவர் என்றார். இளைஞர்களை அதிகம் கட்சியில் சேர்க்க வேண்டும், என்றார்.
முன்னதாக காமராஜர் இல்லத்திற்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நிருபர்களிடம் கூறியதாவது: மண்ணின் மனிதர்கள் உள்ள வரை மறக்கமுடியாத மாமனிதர்காமராஜர். அவருடைய வழியில் கட்சியை வலுப்படுத்தவும், கட்டமைப்பை மேம்படுத்தவும் உறுதி ஏற்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வாய்ப்பில்லாத ஒன்று, என்றார்.