/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
6 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
/
6 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
ADDED : ஏப் 29, 2024 05:02 AM
சிவகாசி: சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரித்த ஆலைகள், விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகள் என 6 பட்டாசு ஆலைகளில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி தாசில்தார் திருப்பதி கூறுகையில், பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கங்கர் செவல்பட்டியில் இரு பட்டாசு ஆலை, சூரார் பட்டியில் ஒரு பட்டாசு ஆலை, அனுப்பங்குளத்தில் இரு பட்டாசு ஆலைகள், காளையார் குறிச்சியில் ஒரு பட்டாசு ஆலையில் அளவுக்கு அதிகமாக பணியாளர்கள் கொண்டு பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தது.
மேலும் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பது தெரிய வந்தது. இந்த ஆறு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என்றார்.

