/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரி உரிமம் ரத்து செய்ய பரிந்துரை கனிம வளத்துறை அதிகாரி தகவல்
/
குவாரி உரிமம் ரத்து செய்ய பரிந்துரை கனிம வளத்துறை அதிகாரி தகவல்
குவாரி உரிமம் ரத்து செய்ய பரிந்துரை கனிம வளத்துறை அதிகாரி தகவல்
குவாரி உரிமம் ரத்து செய்ய பரிந்துரை கனிம வளத்துறை அதிகாரி தகவல்
ADDED : மே 03, 2024 02:35 AM
காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆவியூர் குவாரியில் விதிமீறல்கள் நடந்துள்ளதால் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் ,என கனிம வள துணை இயக்குனர் தங்க முனியசாமி தெரிவித்தார்:
காரியாபட்டி ஆவியூர் குவாரியில் செயல்பட்டு வந்த வெடி மருந்து குடோனில் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியான சம்பவத்தை தொடர்ந்து, குவாரியில் விருதுநகர் கனிமவள துணை இயக்குனர் தங்க முனியசாமி, தலைமையில் வருவாய்த் துறை, போலீசார், தீயணைப்பு துறை கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
தங்க முனியசாமி கூறியதாவது:
குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. பாறைகளை தகர்க்க குவாரியில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இட்டு வெடி மருந்துகள் செலுத்தப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை வெடிக்க வைத்து தான் செயலிழக்க செய்ய முடியும். வெடிக்கச்செய்யும் முன் சுற்றி உள்ள கிராமங்களுக்கு அறிவிப்பு செய்யப்படும். குவாரியில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பதால் உரிமத்தை ரத்து செய்து குவாரியை நிரந்தரமாக மூட கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
பல கி.மீ., துாரங்களில் சிதறிக் கிடக்கும் வெடி மருந்து துகள்களை சேகரித்து அழிக்கும் நடவடிக்கையில் மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை துணை இயக்குனர்கள் பலிவாடா ரவி, சமிரான் ஷர்மா, மதுரை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு துறை இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.