/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிணற்றில் விழுந்ததாக தேடிய சிறுமி துாங்கிக் கொண்டிருந்ததால் நிம்மதி
/
கிணற்றில் விழுந்ததாக தேடிய சிறுமி துாங்கிக் கொண்டிருந்ததால் நிம்மதி
கிணற்றில் விழுந்ததாக தேடிய சிறுமி துாங்கிக் கொண்டிருந்ததால் நிம்மதி
கிணற்றில் விழுந்ததாக தேடிய சிறுமி துாங்கிக் கொண்டிருந்ததால் நிம்மதி
ADDED : ஏப் 12, 2024 04:11 AM

நரிக்குடி: கிணற்றில் விழுந்ததாக தேடப்பட்ட சிறுமி உறவினர் வீட்டில் துாங்கிக் கொண்டிருப்பதாக தெரிந்ததும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நரிக்குடி புளியண்டார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பு என்பவரது மகள் பவித்ரா 13. கமுதி கீழமுடிமன்னார் கோட்டையில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தார். நேற்று முன் தினம் காலை பெற்றோர் பவித்ராவை சத்தம் போட்டனர்.
கோபத்தில் வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குமராண்டிக்கு சொந்தமான தோட்டத்தில் தரைமட்ட கிணற்றின் அருகே பூ கிடந்தது. சிறுமி வெளியில் சென்ற போது தலையில் பூ வைத்திருந்தார். சிறுமி வைத்திருந்த பூவாக இருக்கலாம் என கருதி, ஒரு வேளை கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற அச்சத்தில் கிராமத்தினர் தேடினர்.
வீரசோழன் போலீசார் காரியாபட்டி தீயணைப்புத் துறையினரும் தேடிப் பார்த்தனர் காணவில்லை. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். அப்போதும் காணவில்லை.
பல மணி நேர போராட்டத்திற்கு பின் பவித்ராவை தேடுவதை அறிந்த உறவினர், அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். சிறுமியை கண்டதும் பெற்றோர், போலீசார், தீயணைப்பு துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

