/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே மேம்பால பணிக்காக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இடமாற்றம் துவக்கம்
/
ரயில்வே மேம்பால பணிக்காக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இடமாற்றம் துவக்கம்
ரயில்வே மேம்பால பணிக்காக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இடமாற்றம் துவக்கம்
ரயில்வே மேம்பால பணிக்காக மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இடமாற்றம் துவக்கம்
ADDED : பிப் 24, 2025 03:52 AM

சிவகாசி ; சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடம் மாற்றம் பணி நடந்து வருகிறது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.28 கோடி மதிப்பில் 23 பேரிடம் இருந்து 2,818 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சிவகாசி பெரியகுளம் கண்மாய் இரட்டைப் பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரூ.61.74 கோடியில் மேம்பாலம் அமைக்க 2024 ஜூலை 26 ல் கட்டுமான பணியை துவங்கியது.
ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டது. கிழக்கு பகுதியில், கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த டிரான்ஸ்பார்மர்கள் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து துாண்கள் இணைக்கப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் மேற்கு பக்கத்தில் ரோட்டோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அகற்றப்படாததால் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் நிலவியது.
இந்நிலையில் மின்வாரியம் சார்பில் மின் வயர்களை இடமாற்றம் செய்வதற்காக புதிய மின்கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் மேற்கு பகுதியிலும் மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்(சிறப்பு திட்டங்கள்) ஜெகன் செல்வராஜ் கூறுகையில்: ரயில்வே கிராசிங் மேற்குப் பகுதியில் உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதற்கு மின்வாரியம் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மின் வயர்கள் மாற்றப்பட்ட பின்னர், மேற்குப் பகுதியில் மேம்பாலப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தற்போது அப்பணிகள் நடந்து வருகிறது. டிச. வரை திட்ட காலம் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பணிகள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது, என்றார்.

