/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்ததை அகற்றி புதிய மின்கம்பம் அமைப்பு
/
சேதமடைந்ததை அகற்றி புதிய மின்கம்பம் அமைப்பு
ADDED : மே 23, 2024 02:47 AM

சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி சோலை காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சேதம் அடைந்திருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.
சிவகாசி சோலை காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மின் கம்பங்கள் உள்ளது. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இந்த மின்கம்பங்களில் பெரும்பான்மையானவை சேதமடைந்துள்ளது.
மின்கம்பத்தில் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. ரோட்டின் ஓரத்திலும் இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக உரசினாலே மின்கம்பம் கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
மக்கள் நடமாடும் போது மின்கம்பம் கீழே விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரியத்தினர் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்தனர். இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

