/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்
/
காரியாபட்டியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்
ADDED : ஜூலை 25, 2024 03:51 AM
காரியாபட்டி,: காரியாபட்டியில் ரூ. பல லட்சம் செலவு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்புகள் துளிர் விட்டு வருவதால் செலவுசெய்தது வீணானது. நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டியில் ரோட்டோரத்தில் காய்கறிகடைகள் வைத்தும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியும், கடைக்காரர்கள் ரோடு வரை ஷெட் அமைத்தும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் படாத பாடுபட்டனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன் ரூ. பல லட்சங்கள் செலவு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ரோட்டோரத்தில்இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றுவதிலும், மரக்கிளைகளை வெட்டுவதிலும் பாரபட்சம் காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.
ஒரு சிலரின் வீடுகளில் உள்ள காம்பவுண்டு சுவர்களை கூட இடித்து அப்புறப்படுத்தினர். இது அனைவராலும் வரவேற்கப்பட்டது. ஆனாலும்அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்களா என்றால் இல்லை.
இது ஒரு புறம் இருக்க, ஆக்கிரமிப்புகள்அகற்றுவது முழுமை அடையாத நிலையில், அதற்குள் மீண்டும் ஆக்கிரமிப்புகள் துளிர் விட்டு வருகின்றன.
ரூ. பல லட்சம் செலவு செய்து அகற்றப்பட்டது வீணானது. அனைத்து இடங்களிலும் பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும்துளிர் விடுவதை தடுத்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

