/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதம் அடைந்த மின்கம்பம் மாற்றம்
/
சேதம் அடைந்த மின்கம்பம் மாற்றம்
ADDED : ஆக 08, 2024 04:13 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.
சிவகாசியிலிருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்கள் உள்ளன.
இதன் வழியாக அப்பகுதியினருக்கு உயர் அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இங்கு ஒரு சில மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்திருந்தது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதியில் சேதம் அடைந்திருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது.