/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
/
ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி
ADDED : ஏப் 08, 2024 05:36 AM

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் காலனி செல்லும், ரோடு வாறுகால் சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் செல்லும் ரோட்டில் இருந்து ராதாகிருஷ்ணன் காலனிக்கு செல்லும் ரோடு, வாறுகால் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தற்போது இந்த ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மேலும் வாறுகால் சேதமடைந்து முட்புதர்களால் சூழ்ந்து துார்ந்துள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் உடனடியாக ரோடு, வாறுகாலை சீரமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

