ADDED : ஏப் 30, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி : திருச்சுழி அருகே ஆலடிபட்டியை சேர்ந்தவர் ஜெயராணி, 45, இவர் குலசேகரநல்லூரில் தங்கி இருந்து, சித்தலகுண்டுவில் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது இவரிடம் ஒரு வாலிபர் அட்ரஸ் கேட்பது போல் பேச்சு கொடுத்து கையில் வைத்திருந்த கத்தியை ஜெயராணி கழுத்தில் வைத்து, அவர் விரலில் அணிந்திருந்த 2 கிராம் மோதிரத்தை கழற்றி வாங்கிக் கொண்டு ஓடி விட்டார். அந்த நபர் ஆலடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, 26, என்பது ஜெயராணிக்கு தெரியவந்தது. திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
