/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டவுன் பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படும் ரூட் பஸ்கள்
/
டவுன் பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படும் ரூட் பஸ்கள்
ADDED : மார் 10, 2025 04:29 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த சில நாட்களாக டவுன் பஸ்களுக்கு பதிலாக ரூட் பஸ்கள் இயக்கப்படுவதால் இலவச பஸ்சா, கட்டண பஸ்சா என தெரியாமல் பெண் பயணிகள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 15க்கும் மேற்பட்ட டவுன்பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பஸ்களாக இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்களின் பிங்க் கலரை பார்த்து பெண்கள் பயணித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக கலிங்கப்பட்டி, வத்திராயிருப்பு, விளாம்பட்டி போன்ற கிராமப்புற வழித்தடங்களில் பச்சை கலர் ரூட் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் வழித்தட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இது இலவச பஸ்சா அல்லது கட்டண பஸ்சா என தெரியாமல் தவிப்புக்கு ஆளாகினர். எனவே, எப்போதும் போல் தங்கள் வழித்தடங்களில் டவுன் பஸ்களையே இயக்க, போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமப்புற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.