/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூ வீலரில் வந்தவரிடம் ரூ.40 ஆயிரம் பறிப்பு
/
டூ வீலரில் வந்தவரிடம் ரூ.40 ஆயிரம் பறிப்பு
ADDED : மே 28, 2024 05:36 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே டூவீலரில் வந்த வரிடம் ரூ. 40 ஆயிரத்தை ஹெல்மெட் அணிந்த கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் வெல்டிங் கடை வைத்திருப்பவர் முனியசாமி, 37, இவர் நேற்று காலை அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு கோபாலபுரம் - பாலவநத்தம் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.
இடையில் இவரது டூ வீலரை , மற்றொரு டூ வீலரில் ஹெல்மெட் அணிந்த இருவர் நிறுத்தியுள்ளனர். கையில் பெரிய கத்தியை காட்டி முனியசாமியை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தனர்.
பின்னர் அவர் வைத்திருந்த அலைபேசியை பறிக்க முயன்ற போது, அந்த வழியாக மற்றொரு டூவீலர் வருவதை பார்த்து இருவரும் அவர்கள் வந்த டூவீலரில் ஏறி சென்று விட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.