/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் தொகை விடுபட்ட அனைவருக்கும் தேர்தலுக்கு பின் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும்

ADDED : ஏப் 04, 2024 11:41 PM
சிவகாசி : மகளிர் தொகை விடுபட்ட அனைவருக்கும் தேர்தலுக்கு பின் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும், என சிவகாசியில் நடந்த பிரசாரத்தில் மாணிக்கம்தாகூர் எம்.பி., பேசினார்.
சிவகாசி சட்டசபை தொகுதி திருத்தங்கலில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மாணிக்கம்தாகூர் எம்.பி., பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ரூ.500 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெ., வழங்காததை, முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் உரிமை தொகை வழங்கி வருகிறார். மாதம்தோறும் 1.15 கோடி பெண்களுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட அனைவருக்கும் தேர்தலுக்கு பின் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
தேர்தலுக்கு பின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65, டீசல் ரூ.55 ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் அறிவித்துள்ள மகாலட்சுமி திட்டம் மூலம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் சிலிண்டர் ரூ.500க்கும், டீசல் லிட்டர் ரூ.55க்கும், 3 நல்ல விஷயங்கள் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.