/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ்., குரு பூஜை விழா
/
ராஜபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ்., குரு பூஜை விழா
ADDED : ஜூலை 29, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குருபூஜை விழா நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் காவிக் கொடியை குருவாக கருதி மரியாதை செலுத்தி வணங்கி குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராஜபாளையம் ஆவரம்பட்டியில் நடந்த விழாவிற்கு ஆர்.எஸ்.எஸ்., சமுதாய நல்லிணக்க குழு நகர் தலைவர் சுப்பிரமணிய ராஜா தலைமை வகித்து குரு பூஜை சிறப்பு குறித்து பேசினார். சங்கக் கொடிக்கும், பாரதமாதா, ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கோவர், வழி நடத்திய குருஜீ ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நவநீத கிருஷ்ணன் செய்திருந்தார்.