/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அர்ஜூனா நதி வழித்தடத்தில் மணல் கொள்ளை; கண்துடைப்பானதா கண்காணிப்பு
/
அர்ஜூனா நதி வழித்தடத்தில் மணல் கொள்ளை; கண்துடைப்பானதா கண்காணிப்பு
அர்ஜூனா நதி வழித்தடத்தில் மணல் கொள்ளை; கண்துடைப்பானதா கண்காணிப்பு
அர்ஜூனா நதி வழித்தடத்தில் மணல் கொள்ளை; கண்துடைப்பானதா கண்காணிப்பு
ADDED : ஆக 09, 2024 12:16 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட எல்லை வழியாக வரும் அர்ஜூனா நதியின் வழித்தடத்தில் ஆங்காங்கே மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.
வத்திராயிருப்பில் துவங்கும் அர்ஜூனா நதி, சிவகாசி வழியே சென்று விருதுநகர் கன்னிச்சேரிபுதுார் வழியே கோல்வார்பட்டி அணை வரை செல்கிறது. இந்நிலையில் அர்ஜூனா நதியில் விருதுநகர் பகுதியில் மணல் அள்ளுவது அதிகரித்து வருகிறது. வச்சக்காரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் தான் இந்த மணல் கும்பலின் அத்துமீறல் அதிகமாக உள்ளது. . மழைக்காலங்களில் அர்ஜூனா நதி வழியே செல்லும் நீரானது ஆனைக்குட்டம் அணையை நிறைப்பது போல், அதில் இருந்து வெளியேறும் நீர் கோல்வார்பட்டி அணையையும் நிறைக்கும். மழைக்காலங்களை தவிர மற்ற நேரங்களில் இந்த வழித்தடத்தில் நீரோட்டம் இருக்காது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் அவ்வப்போது மண் அள்ளி வருகின்றனர். மண் அள்ளும் பகுதிகளில் போலீசார் அவ்வப்போது கண்காணிப்பு செய்து வரும் நிலையிலும் அத்துமீறல் தொடர்வது வாடிக்கையக உள்ளது. இதனால் மக்கள் இந்த கண்காணிப்பு வெறும் கண்துடைப்பு தான என கேள்வி எழுப்புகின்றனர். வருவாய்த்துறையினரும் கண்காணிப்பது குறைந்துள்ளது. இதனால் நீரின் வழித்தடம் மாறவும், பள்ளம் அதிகமாகவும் வாய்ப்புள்ளது. எனவே மண் அள்ளுவதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.