சிவகாசி : சிவகாசி விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஊருணி கரையில் தேசிய காகித தின விழாவை முன்னிட்டு பேப்பர் மெர்ச்சன்ட் அசோசியேஷன், பசுமை மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
சிவகாசி விளாம்பட்டி ரோடு அருண் நகர் அருகே துார்ந்த நிலையில் ஊருணி இருந்தது. இதனை பசுமை மன்றம் சார்பில் துார்வாரினர். மேலும் சுற்றிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டு தடுப்புச் சுவரும் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பெய்த மழையில் ஊருணிக்கு தண்ணீர் வந்தது.
இந்நிலையில் தேசிய காகித தினத்தை முன்னிட்டு பேப்பர் மெர்ச்சன்ட் அசோசியேசன், பசுமை மன்றம் சார்பில் ஊருணி கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் புங்கை, வேம்பு, உள்ளிட்ட மரக்கன்றுகளும் மூலிகை, பூச்செடிகளும் நடப்பட்டது. பேப்பர் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் பாலாஜி, நிர்வாகி ராதா சேகரன், பசுமை மன்றம் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், செல்வகுமார், சுரேஷ் தர்க்கார் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.