ADDED : மார் 25, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : ஸ்ரீவில்லிபுத்துாரில் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் வம்பன் 4 வல்லுனர் விதைப்பண்ணை ஆய்வு செய்யப்பட்டது.
விதை சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசரியர்கள் வீரபுத்திரன், தங்கப்பாண்டியன், மதுரை வேளாண் கல்லுாரி இணை பேராசிரியர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர்.
விதைப்பண்ணை வயலில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ரகமானது பாசிப்பயறு உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.
மாவட்ட விவசாயிகள் வம்பன் 4 ரக விதை உற்பத்தியை பின்பற்றி பயன்பெறலாம்.
மாவட்ட விவசாயிகள் அனைவரும் தரமான சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றனர்.

