/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மம்சாபுரத்தில் கட்டிய சில நாட்களில் சரிந்த கழிவு நீர் வாறுகால்
/
மம்சாபுரத்தில் கட்டிய சில நாட்களில் சரிந்த கழிவு நீர் வாறுகால்
மம்சாபுரத்தில் கட்டிய சில நாட்களில் சரிந்த கழிவு நீர் வாறுகால்
மம்சாபுரத்தில் கட்டிய சில நாட்களில் சரிந்த கழிவு நீர் வாறுகால்
ADDED : மே 17, 2024 06:43 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : மம்சாபுரம் மெயின் ரோட்டில் கட்டிய சில நாட்களில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் சரிந்து விழுந்தது. அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், மீண்டும் கட்டுமான பணி துவங்கியது.
மம்சாபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ராஜபாளையம் ரோடு ஐயப்பன்கோயில் வரை ரோட்டின் மேற்கு பகுதியில், 500 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் வாறுகால் கட்டும் பணி நடந்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு வாறுகாலின் புதிய கட்டுமான சுவர் சரிந்து விழுந்தது.
சம்பவ பகுதியை பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் இன்ஜினியர் குழுவினர் நேற்று காலை பார்வையிட்டனர்.
சரிந்து விழுந்த பகுதியை முழு அளவில் அப்புறப்படுத்தி தரமாக கட்ட உத்தரவிட்டனர். இதனையடுத்து நேற்று மீண்டும் வாறுகால் கட்டும்பணி துவங்கியது.
அதிக கனரக வாகன போக்குவரத்து உள்ள இந்த ரோட்டில் தரமான வகையில் கழிவுநீர் வாறுகால் கட்டுமான பணிகள் செய்யப்பட வேண்டும்.