ADDED : ஏப் 07, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் உள்ள சிவன் கோயில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.
விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சொக்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டது. நந்திக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதே போல் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சன்னதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள சிவகணேசன் கோயிலிலும் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

