/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உங்கள் பாசத்தையும் அன்பையும் ஓட்டில் காண்பியுங்கள்: சண்முக பாண்டியன் பிரசாரம்

ADDED : ஏப் 13, 2024 02:27 AM

அருப்புக்கோட்டை : விருதுநகர் லோக்சபா தொகுதியின் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, அவருடைய தம்பி சண்முக பாண்டியன் பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், உங்கள் வீட்டுப் பிள்ளையாக மகனாக என்னுடைய அண்ணன் விஜய பிரபாகரன் இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். நீங்கள் காண்பிக்கும் அன்பு பாசத்தையும் உங்கள் ஓட்டில் காண்பித்து அவரை ஜெயிக்க வையுங்கள். அவர் வெற்றி பெற்றால் உங்கள் கஷ்ட நஷ்டங்களை தீர்த்து வைப்பார். உங்களில் பல பேர் விஜயகாந்தை பார்க்க முடியவில்லை. அவருக்கு ஓட்டு போட்டு அவரை ஜெயிக்க வைத்திருக்கலாமே என நினைத்திருப்போம். அவரது மகன் விஜய பிரபாகரனை ஜெயிக்க வையுங்கள். எங்கள் அப்பா விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடையும், என பேசினார்.
- - -
படம் உள்ளது