ADDED : ஜூலை 20, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை இ.பி., காலனியை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி இ.பி., காலனியில் 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீருக்காக மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது, ஊராட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை, இதனால் இப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., ஜெயந்தியிடம் மனு அளித்து விட்டு கலைந்தனர்.
ஜல் ஜீவன் திட்டத்தில் தரமற்ற பணிகளால் பாலையம்பட்டியின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடங்களுடன் அலைகின்றனர். மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
