ADDED : ஜூன் 30, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: துாய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம், மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்குவது, துப்புரவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்குவது, ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், துப்புரவு பணிகளை தனியாருக்கு விடாமல், தாங்களே நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு துப்புரவு, துாய்மை காவலர் பொது தொழிற்சங்கம் சார்பில் விருதுநகர் கலெக்டர் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் லெட்சுமி, சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
