ADDED : ஜூலை 31, 2026 07:12 PM
காரியாபட்டி, ஆக. 1-
மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வந்த ‘ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்’ எனும் நடமாடும் பஸ் விண்வெளி கண்காட்சி நடந்தது.
தலைமை ஆசிரியை பாரதி துவக்கி வைத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய சாதனைகள், விண்வெளி அறிவியல் குறித்த மாதிரிகள் இடம் பெற்றன. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி அதிகாரி குமார், வானொலி கல்வி அமைப்பைச் சார்ந்த பாலமுருகன் மாணவர்களின் சந்தேகங்களை விளக்கினர். இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொண்டு கொண்டனர். அருப்புக்கோட்டை அறிவியல் ஆர்வலர் பாசில், சந்திரன், செவ்வாய் கிரகத்தின் விண்கற்கள், விண்வெளி தொடர்பான பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஆசிரியர் இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வேதியியல் ஆசிரியர் ராம்குமார் செய்திருந்தார்.
