/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படை போலீசார்
/
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படை போலீசார்
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படை போலீசார்
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படை போலீசார்
ADDED : பிப் 24, 2025 03:55 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களின் கிடுக்கிப்பிடியால் பல்வேறு குற்ற சம்பவங்களில் கைதாகி, ஜாமின் பெற்று பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்களை தனிப்படை போலீசார் தேடி பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் அந்தந்த நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இத்தகைய வழக்குகளில் ஜாமின் பெறுபவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் நீதிமன்றங்களில் வழக்குகள் முடிக்கப்படாமல் தேங்கி வந்தது.
இந்நிலையில் மாதந்தோறும் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில், தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஒவ்வொரு காவல் சப் டிவிஷனிலும் தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டு தேடியதில், பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கோட்டத்தில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பிடிபடாதவர்களையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

