/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு
/
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 19, 2024 04:53 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் பஞ்சராகி நின்ற அரசு போக்குவரத்து கழக பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விருதுநகர் கோட்டத்தில் பெரும்பாலான அரசு டவுன் பஸ்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளது. இதில் பல பஸ்களில் படிக்கட்டுகள் மற்றும் பிளாட்பார்ம்கள் சேதமடைந்தும், டயர்கள் வழுக்கை விழுந்தும், இரவு நேரங்களில் முகப்பு விளக்குகள் போதிய வெளிச்சமின்றியும், மழை நேரங்களில் மேற்கூரை ஒழுகியும், கண்ணாடிகளை துடைக்கும் வைபர்கள் வேலை செய்யாமல், போதிய பராமரிப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் ஒரு அரசு டவுன் பஸ்ஸின் பின்புற படிக்கட்டு உடைந்து ரோட்டில் விழுந்தது அதற்கு உதாரணம். இதேபோல் பல பஸ்கள் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதை நிரூபிக்கும் வகையில் நேற்று மதியம் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஒரு சம்பவம் நடந்தது.
நேற்று மதியம் 12:40 மணியளவில் குன்னூரில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு டவுன் பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் டயர் பஞ்சராகி நின்று விட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் எந்த பஸ்சும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் மதுரை, தேனி போன்ற வெளியூருக்கு செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வராமல் மணிக்கூண்டு வழியாக சென்றது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த பயணிகள் வெகு நேரம் காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் டயரினை உடனடியாக கழட்டி மாற்றும் பணியில் ஈடுபட்டனர். எனவே, மாவட்டத்தில் காலாவதியான பழுதான டவுன் பஸ் களை நிறுத்திவிட்டு புதிய பஸ்களை இயக்க விருதுநகர் கோட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கோரிக்கையாகும்.

