/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு; போக்குவரத்து நெருக்கடி; சுகாதாரக் கேடு; ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 25வது வார்டு குறைகள்

ADDED : ஏப் 03, 2024 07:09 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 25வது வார்டில் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெருக்கடி, சுகாதாரக் கேடு உட்பட பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது.
இந்த வார்டில் வடக்கு ரத வீதி, நாடகசாலை தெரு, மேலரத வீதி, மாடவீதிகள், பெரிய கடை பஜார், திருவேங்கட அன்னைகள் தெரு, சூடிக்கொடுத்த விநாயகர் கோவில் தெரு உட்பட பல்வேறு தெருக்கள் உள்ளன.
இதில் வடக்கு ரத வீதியில் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து மக்கள் எளிதில் சென்று வர முடியாத நிலை உள்ளது. பெரிய கடை பஜாரில் இருந்து ஆண்டாள் கோயில் வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் எளிதில் சென்று வர முடியாத நிலை காணப்படுகிறது.
மேல ரத வீதியிலிருந்து நாடக சாலை தெரு செல்லும் வழியில் தோண்டப்பட்ட வாறுகால் சீரமைக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் குடிநீர் சப்ளையின்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வாறுகாலில் சேர்கிறது.
மேலரத வீதி மேற்கு பகுதியில் உள்ள வாறுகால்கள் கழிவு நீர் அடிக்கடி தேங்கி வீட்டு வாசல்களிலும், ரோட்டிலும் செல்கிறது. இதனை அவ்வப்போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
திருவேங்கட அன்னை தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே கழிவுகள் கொட்டப்பட்டும், இரவு நேரங்களில் சிறுநீர் கழிப்பிடமாகவும் உள்ளது சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. பல தெருக்களில் உள்ள வாறுகால்கள் மண் மேவி காணப்படுகிறது. இத்தகைய குறைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
* வாறுகால்களை சீரமைக்க வேண்டும்.
மேல ரதவீதியில் இருந்து நாடக சாலை தெருவிற்கு திரும்பும் பகுதியில் தோண்டப்பட்ட கழிவு நீர் வாறுகால் சீரமைக்க வேண்டும். அப்பகுதியில் இருந்து தேவர் சிலை வரை வாறுகால்களை முழு அளவில் சுத்தம் செய்து விட்டு வாசலில் கழிவு நீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். குடிநீர் சப்ளையின் போது அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.
-சின்ன ராஜா, குடியிருப்பாளர்.
* தேவை தூய்மை
அதிகளவு வெளியூர் மக்கள் வந்து செல்லும் ஆண்டாள் கோயிலை சுற்றி உள்ள தெருக்களை கொண்ட இந்த வார்டில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையான பகுதியாக இந்த வார்டினை உருவாக்க வேண்டும். அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை சரி செய்து, போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும்.
-வைதேகி, குடியிருப்பாளர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.3--
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 25வது வார்டில் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெருக்கடி, சுகாதாரக் கேடு உட்பட பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது.
இந்த வார்டில் வடக்கு ரத வீதி, நாடகசாலை தெரு, மேலரத வீதி, மாடவீதிகள், பெரிய கடை பஜார், திருவேங்கட அன்னைகள் தெரு, சூடிக்கொடுத்த விநாயகர் கோவில் தெரு உட்பட பல்வேறு தெருக்கள் உள்ளன.
இதில் வடக்கு ரத வீதியில் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து மக்கள் எளிதில் சென்று வர முடியாத நிலை உள்ளது. பெரிய கடை பஜாரில் இருந்து ஆண்டாள் கோயில் வரை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் எளிதில் சென்று வர முடியாத நிலை காணப்படுகிறது.
மேல ரத வீதியிலிருந்து நாடக சாலை தெரு செல்லும் வழியில் தோண்டப்பட்ட வாறுகால் சீரமைக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் குடிநீர் சப்ளையின்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வாறுகாலில் சேர்கிறது.
மேலரத வீதி மேற்கு பகுதியில் உள்ள வாறுகால்கள் கழிவு நீர் அடிக்கடி தேங்கி வீட்டு வாசல்களிலும், ரோட்டிலும் செல்கிறது.
இதனை அவ்வப்போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
திருவேங்கட அன்னை தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே கழிவுகள் கொட்டப்பட்டும், இரவு நேரங்களில் சிறுநீர் கழிப்பிடமாகவும் உள்ளது சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. பல தெருக்களில் உள்ள வாறுகால்கள் மண் மேவி காணப்படுகிறது. இத்தகைய குறைகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாறுகால்களை சீரமைக்க வேண்டும்
-சின்ன ராஜா, குடியிருப்பாளர்: மேல ரதவீதியில் இருந்து நாடக சாலை தெருவிற்கு திரும்பும் பகுதியில் தோண்டப்பட்ட கழிவு நீர் வாறுகால் சீரமைக்க வேண்டும். அப்பகுதியில் இருந்து தேவர் சிலை வரை வாறுகால்களை முழு அளவில் சுத்தம் செய்து விட்டு வாசலில் கழிவு நீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். குடிநீர் சப்ளையின் போது அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.
தேவை தூய்மை
-வைதேகி, குடியிருப்பாளர்: அதிகளவு வெளியூர் மக்கள் வந்து செல்லும் ஆண்டாள் கோயிலை சுற்றி உள்ள தெருக்களை கொண்ட இந்த வார்டில் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையான பகுதியாக இந்த வார்டினை உருவாக்க வேண்டும். அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை சரி செய்து, போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும்.