/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டு பதிவு மிஷின்களில் சின்னம் பொருத்தும் பணி
/
ஓட்டு பதிவு மிஷின்களில் சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 10, 2024 06:15 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தென்காசி தனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதிக்கான எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஷின்களில் சின்னம் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
தென்காசி தொகுதியில் தி.மு.க. ராணி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி,.தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் உட்பட பலர் போட்டியிடுகின்றனர். கட்சிகள் சார்பில் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகளும் தங்களது பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டிங் மிஜின்களில் சின்னம் பொருத்தும் பணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் தலைமையில் நேற்று மதியம் 2:00 மணி முதல் துவங்கியது. பின்னர் பெல் நிறுவன அலுவலர்கள் மிஷின்கள் சரியாக செயல்படுகிறதா என சோதனை செய்தனர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் முத்துமாரி மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

