/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடுரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடியால் அவதி
/
நடுரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடியால் அவதி
நடுரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடியால் அவதி
நடுரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடியால் அவதி
ADDED : ஆக 27, 2024 05:58 AM
காரியாபட்டி : காரியாபட்டி முக்கு ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி விடும் ஓட்டுனர்களால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது.
காரியாபட்டியில் மதுரை- அருப்புக்கோட்டை மெயின் ரோடு, திருச்சுழி - கள்ளிக்குடி ரோடு ஓரத்தில் வாறுகால் கட்டும் பணி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணி, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
இதில் ரோட்டோரங்களில் டூவீலர்கள், வாடகை வாகனங்களை நிறுத்தியும், நடமாடும் காய்கறி வாகனங்கள், கடைகாரர்கள் என ஆக்கிரமிப்பால் ரோடு குறுகலாகி வாகனங்கள் சென்று வருவது சவாலாக இருந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, முக்கு ரோடு பஸ் நிறுத்தத்தில் மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு செல்லும் பஸ் ஓட்டுநர்கள் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றவும், இறக்கியும் விடுகின்றனர். பின்னால் வரும் மற்ற வாகனங்கள் விலகிச் செல்ல இடம் இல்லாமல், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. சற்று தள்ளி ஓரமாக நிறுத்தினால் கள்ளிக்குடி வழியாக செல்லும் வாகனங்களும், திருச்சுழி வழியாக செல்லும் வாகனங்கள், அருப்புக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் எளிதில் விலகிச் செல்ல முடியும்.
பெரும்பாலான பஸ் ஓட்டுனர்கள் நடு ரோட்டில் நிறுத்தி போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறு இன்றி பஸ்களை நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.