/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'அகழாய்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
/
'அகழாய்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
'அகழாய்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
'அகழாய்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
ADDED : மார் 05, 2025 06:06 AM
சிவகாசி: அகழாய்வு குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என விஜய கரிசல்குளம் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட்ட தேர்வுத்துறை இணை இயக்குனர் மகேஸ்வரி கூறினார்.
மாவட்டத்தில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த மேல்நிலை பொதுத்தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக சென்னை தேர்வுத்துறை இணை இயக்குனர் மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பிளஸ் டூ பொதுத்தேர்வு இல்லாததால் தேர்வுத்துறை இணை இயக்குனர் மகேஸ்வரி விஜய கரிசல்குளத்தில் நடந்து வரும் அகழாய்வு பணி, கண்காட்சியை பார்வையிட்டார்.
அவருக்கு அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி விளக்கம் அளித்தார். பின்னர் தேர்வுத்துறை இணை இயக்குனர் கூறுகையில், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை பெருமைகள் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை. அரசு தொல்லியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் அகழாய்வு குறித்து பள்ளி மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.
பள்ளிகளில் 2017 ல் தொல்லியல் பாதுகாப்பு மன்றம் துவக்கப்பட்டது. இதற்காக வரலாறு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தீவிரமாக்கி பள்ளி மாணவர்களுக்கு அகழாய்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். பள்ளி துறை ஆய்வாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தார்.

