/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெயில் தாக்கத்தை குறைத்த திடீர் மழை
/
வெயில் தாக்கத்தை குறைத்த திடீர் மழை
ADDED : மார் 13, 2025 04:22 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேர்வு காலம் என்பதால் வெயிலோடு சென்று வரும் நிலைக்கு ஆளாகினர்.
மேலும் தினமும் பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சை, பரிசோதனைக்கு சென்று வந்தவர்களும் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கருமேக கூட்டங்களுடன் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இதனால் நேற்று இரவு வரை குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.