/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தகிக்கும் வெப்ப அலை; நிழலில் கால்நடைகள் தஞ்சம்
/
தகிக்கும் வெப்ப அலை; நிழலில் கால்நடைகள் தஞ்சம்
ADDED : ஏப் 30, 2024 12:18 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. வெப்ப அலை வீசியதால் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் கூட மரத்தடியில் தஞ்சமடைந்தன.
தமிழகம் முழுவதும் மே 1 வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வந்தாலே விருதுநகர் மாவட்டத்தில் தகிக்க முடியாத அளவு வெப்பம் வீசும். தற்போது தமிழக அளவிலான வெப்ப அலை தாக்கம் இருப்பதால் விருதுநகரிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 8:00 மணி முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. காலை 10:00 மணிக்கெல்லாம் அனல் காற்றுடன் வானிலை காணபட்டது. அலையும் வகையில் வேலை செய்தோர் ஆங்காங்கே கடைகளில் கிடைத்த இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவை குடித்து வெப்பத்தை தணித்து கொண்டனர். அலுவலக வேலை புரிவோர் வேகமாக அலுவலகங்களில் தஞ்சம் புகுந்தனர்.
தினசரி கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வோர் கூட நேற்று தலையில் துண்டை கட்டி திண்டாடி தான் சென்றனர். ஆங்காங்கே மர நிழலில் தஞ்சம் அடைந்தனர். கால்நடைகளும் சிறிய நீராதாரங்களில் கூட தண்ணீரை குடித்தன. பின் மர நிழலில் தஞ்சமடைந்து நின்றன. இது வெயிலின் கடும் தாக்கம் குறித்து உணர்த்தியது.

