/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
* சூப்பர் ரிப்போர்ட்டர் . . .
/
* சூப்பர் ரிப்போர்ட்டர் . . .
ADDED : டிச 07, 2025 08:42 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே ஆலடிபட்டி காமராஜர் நகரில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அல்லல் படுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆலடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது காமராஜர் நகர். இது உருவாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் மின்கம்பங்கள் இருந்தும் தெரு விளக்குகள் இல்லை.
இரவு நேரங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் சிரமத்துடனும் பீதியுடனும் இருட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
ஒரு சில தெருக்களில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக பகிர்மான குழாய் பதிக்க தோண்டப்பட்டு பணி முடிந்தவுடன் சரி செய்யாமல் விட்டு சென்றதால் ரோடு சேதம் அடைந் துள்ளது.
ரேஷன் பொருள்கள் வாங்க 2 கி.மீ., துாரத்தில் உள்ள ராமசாமிபட்டி ரேஷன் கடைக்கு நடந்து செல்ல வேண்டியதுள்ளது. ஆலடிபட்டியிலேயே ஒரு ரேஷன் கடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சுழி ரோடு பகுதியில் உள்ள தெருக்களில் வாறுகால்களை சுத்தம் செய்து அதன் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தாமல் ரோட்டிலேயே கொட்டி வைத்திருப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
காமராஜர் நகர் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து உள்ளது. இடித்துவிட்டு புதியதாக அமைக்க வேண்டும்.
இருண்ட தெருக்கள் கண்ணன், விவசாயி: காமராஜர் நகரில் உள்ள தெருக்களில் மின் கம்பங்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எதிலும் மின் விளக்குகள் பொருத்தப்படாததால் இரவில் தெருக்களில் இருளில் செல்ல வேண்டியுள்ளது. பலமுறை மின் விளக்கு கேட்டு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
ரேஷன் கடை அவசியம் பனிமாதா, குடும்ப தலைவி: ஆலடிபட்டியில் ரேஷன் கடை இல்லை. 2 கி.மீ., தூரத்தில் உள்ள ராமசாமி பட்டிக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் பெண்களே செல்வதால் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எங்கள் கிராமத்திற்கு ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த வசதியும் இல்லை சாமுவேல், விவசாயி: காமராஜர் நகர் உருவாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
தெரு விளக்கு, ரோடு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகின்றனர்.
மழைக்காலத்தில் நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம். தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

