தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ * சூப்பர் ரிப்போர்டர்

 * சூப்பர் ரிப்போர்டர்

 * சூப்பர் ரிப்போர்டர்


ADDED : மே 24, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: சேதமான வாறுகால், கழிவுநீரால் சேதமாகும் ரோடு, திறந்த வெளி கழிப்பறை உட்பட பல்வேறு பிரச்னைகளால் திருச்சுழி அருகே வேடநத்தம் கிராம மக்கள் சிரமமப்பட்டு வருகின்றனர்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வேடநத்தம் ஊராட்சி. 1வது வார்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்கப் பட்டது. மக்கள் கழிப்பறை கழிவுகள், சமையலறை கழிவுகளை நேரடியாக வாறுகாலில் விடுவதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. வாறுகால் நிறைந்து தெருக்களில் ஓடுகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாறுகாலும் பல பகுதி களில் சேதமடைந்து விட்டது. ஊரின் வடக்கு பகுதியில் ஒரு ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவு நீர் சேர்ந்து ரோடும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. ஊரில் குப்பை சிதறி கிடக்கிறது.

பொது கழிப்பறை கட்டி யும் பயன்பாடு இன்றி கிடக்கிறது. கழிப்பறைகளை பயன்படுத்த மக்களிடத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லை. திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத் துகின்றனர். மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற் படுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி மூலம் கட்டப்பட்ட கலையரங்கத்தின் அருகில் வாறுகால் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. பல நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவு நீரால் குழந்தைகளுக்கு நோய்கள் வருகிறது.

குப்பை அள்ள தூய்மை பணியாளர்கள் வருவது இல்லை. தெருக்களில் ரோடுகள் அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுகாதார கேடு மாரையா, ஓய்வு அரசு அலுவலர்: வேடநத்தம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால், கேட்டு ஊராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். தெருக்களில் வாறுகால் இன்றி கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. ரோடுகள் குண்டும், குழியுமாக இருப்பதால் கழிவுநீர் அதில் சேர்கிறது. ஊராட்சி நிர்வாகம் தேவையான நிதியை ஒதுக்கி எங் களுக்கு அத்தியாவசியமான வசதிகளை செய்து தர வேண்டும்.

ரோடு இல்லை சுரேஷ் முருகன், தனியார் ஊழியர்: வேடநத்தம் கிராமத்தில் உள்ள தெருக்களில் ரோடு வசதிகள் இல்லை. ஊருக்குள் அமைக்கப்பட்ட ரோடு பல ஆண்டுகள் ஆன நிலையில், கிடங்காக இருப்பதால் வாகனங்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது. ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால் சேதமடைந்து விட்டன. ஊராட்சி நிர் வாகம் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தும், முக்கியமான பகுதியில் தார் ரோடு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாறுகால் இல்லை ராமலட்சுமி, குடும்ப தலைவி: தெருக்களில் வாறுகால் இல்லாமல் கழிவுநீர் தெரு நடுவில் ஓடுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து, சேறும், சகதியுமாக நடக்க முடியாத நிலையில் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் தெருக்களில் வாறுகால் மற்றும் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us