ADDED : ஜூன் 05, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி, ஜூன் 6-
காரியாபட்டியில் மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்கின. த.வெ.க., ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கோயில், பள்ளி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் காரியாபட்டியில் இயங்கிய மூன்று டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை (11811) மாணவிகளின் பாதுகாப்பை கருதி மூடப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மீதமுள்ள இரு கடைகளையும் விரைவில் மூட வேண்டுமென மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
