ADDED : ஜூன் 13, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, ஜூன் 14 -
சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். தமிழ் துறை தலைவர் பொன்னி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலை வகித்தார். உடற்கல்வி துறை இயக்குனர் விஜயகுமாரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். மதுரை யோகாசன நடுவர் ராஜபிரபு, சிகிச்சை யோகா வழி மன அழுத்த மேலாண்மை, முதுகுத்தண்டு பராமரிப்பு, பெண்களின் ஹார்மோன் நலம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லுாரியைச் சேர்ந்த அனைத்து துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பேரவை, உடற் கல்வித்துறை பேராசிரியர்கள் செய்தனர்.
