/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாம்பரம்--கொச்சுவேலி ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் முன்பதிவு துவங்கிய 3 நாளில் சுறுசுறு

ADDED : மே 14, 2024 09:03 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : முன்பதிவு துவங்கிய 3 நாளில் தாம்பரம்- கொச்சுவேலி வாரமிருமுறை கோடைக்கால சிறப்பு ஏ.சி. ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டுள்ளது.
மே 16 முதல் ஜூன் 29 வரை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, விருதுநகர், செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கும், மறு மார்க்கத்தில் மே 17 முதல் ஜூன் 30 வரை கொச்சுவேலியில் இருந்து அதே வழித்தடத்தில் வாரம் இருமுறை, 14 ஏசி பெட்டிகள் மட்டுமே கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
மே 11 முதல் முன்பதிவு துவங்கிய நிலையில் 3வது நாளான நேற்று தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு மே 16, 18 தேதிகளிலும், கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு மே 17, 19 தேதிகளிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை ஏற்பட்டது. இது தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர், -தென்காசி வழித்தடத்தில் எந்த ரயில் இயக்கினாலும் மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளதால் வழித்தடத்தில் கோவை, சென்னை, பெங்களூர், திருப்பதி போன்ற நகரங்களுக்கு நேரடி ரயில் இயக்கவும், ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதியாக முன்பு இயங்கி நிறுத்தப்பட்ட தாம்பரம்-- செங்கோட்டை அந்தியோதயா ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் மீண்டும் இயக்க வேண்டுமெனவும் தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.