/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் கொளுத்தும் வெயிலிலும் சூடுபிடித்த தேர்தல் பிரசாரம்

ADDED : ஏப் 03, 2024 07:04 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை கடந்தும் லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
நேற்று முன்தினம் அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி தனி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் மல்லி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், பெருமாள் தேவன்பட்டி ஹவுஸிங் போர்டு, இடையங்குளம், கோட்டைப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இதே போல் நேற்று காலை 11:00 மணிக்கு பா.ஜனதா கூட்டணியில் போட்டியிடும் ஜான் பாண்டியனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன், பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் கொளுத்தும் வெயிலில் பேசினார்.
பின்னர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து சென்று பொது மக்களிடமும் வியாபாரிகளிடமும் ஆதரவு திரட்டினார்.
நாளை (ஏப்.4) திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையடுத்து வரும் நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், வத்திராயிருப்பு தாலுகாவிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.